தலைமை ஆசிரியர்களை இடம் மாற்ற உத்தரவு 


 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, கவுன்சிலிங் வாயிலாக இடமாறுதல் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர், பொன்னையா அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:நடப்பு, 2020 - -21ம் கல்வியாண்டில், 40 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 

எனவே, தரம் உயர்த்தப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாறுதல் வழியே நியமனம் செய்ய வேண்டும். இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், 40 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,இடமாறுதல் கவுன்சிலிங்கை விதிகளின்படி நடத்த வேண்டும். 

மாவட்டங்களில் காலியிடம் இல்லாவிட்டால், வேறு மாவட்டத்துக்கு, மாறுதல் வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்று, இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். மாறுதல் பெறுவோர், உடனே பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!