அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக பெறும் நடவடிக்கை புதிய அரசாணை வெளியீடு 


 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அளிக்கப்படுகிறது. ஈட்டிய விடுப்பு எடுக்காதவர்களுக்கு அந்த ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியம் பிடித்தம் இல்லாமல் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி அதிக அளவில் தேவைப்பட்டதால், ஒரு ஆண்டுக்கு ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக 2020-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி அரசாணை வெளியிட்டது. 

 அதில், கொரோனா பரவலினால் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு ஆண்டுக்கு 15 நாட்கள் அல்லது 2 ஆண்டுகளுக்கு 30 நாட்கள் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களால் விண்ணப்பித்து பெறப்படும் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. 

ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது. ஒப்புதல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் அந்த அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார். 

 அதில், ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெறும் வசதி 2020-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. ஈட்டிய விடுப்பு தொடர்பாக ஒப்புதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்து விட்டு, அரசு ஊழியரின் விடுப்புக் கணக்கில் சேர்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Post a Comment

أحدث أقدم

Search here!