TNPSC 991 பணியிடங்கள்: பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 


TNPSC Recuritment For Horticulture and agricultural officer 2021: உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. 

 விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் tnpsc.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் 

 விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. 

 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலருக்கான தேர்வு ஏப்ரல் 17 ம் தேதியும், மீதமுள்ள பதவிக்கான தேர்வு ஏப்ரல் 18 ம் தேதியும் நடைபெறும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 991 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டு நேர்காணல் தேர்வுக்காக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 


 காலி பணியிடங்கள் விவரம்: 

  1. தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பணி – 28 
  2. தோட்டக்கலை அதிகாரிகள் பணி – 169 
  3. வேளாண் அதிகாரி (Extension) பணி – 365 
  4. உதவி வேளாண்மை அலுவலர்கள் பணி – 122 
  5. உதவி தோட்டக்கலை அதிகாரிகள் பணி – 307 

 TNPSC 2021: விண்ணப்பிப்பது எப்படி 

STEP 1 – அதிகாரப்பூர்வ அண்ணா பல்கலைக்கழக வலைத்தளத்திற்கு (apply.tnpscexams.in) செல்லுக 
STEP 2 – திரையின் மேலே “விண்ணப்பிக்க ” என்ற இணைப்பைக் கிளிக் செய்க. 
STEP3 – நிரந்தப்பதிவு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துக 
STEP 4 – ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்க ஸ்டேப் 5 – தேர்வுக்கான விவரங்களை நிரப்பி “சப்மிட்” என்பதைக் கிளிக் செய்க. 
STEP 6 – விண்ணப்ப படிவத்தின் நகலைப் பதிவிறக்கம் செய்க.தேர்வுக்கான வயது வரம்பு 30 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த வயது வரம்பு இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தளர்த்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட தேர்வர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!