தமிழ்ச் சுவடியியல்-பதிப்பியல் படிப்புக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ஏப்.19-இல் எழுத்துத் தேர்வு 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையு டன் ஓராண்டு தமிழ்ச் சுவடியியல் பதிப்பியல் பட்ட யப் படிப்புக்கான வகுப்புகள் ஏப்.22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஏப். 19-இல் நடைபெறுகிறது. இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்கு நர் கோ.விசயராகவன் வெளியிட்ட அறிவிப்பு: 


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பல நூறு ஓலைச்சுவடிகள் களப்பணி மூலமாக கண்டெ டுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பாதுகாக் கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடி யியல் மற்றும்பதிப்பியல் பட்டயப்படிப்பு உலகத் #தமி ழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டு வரு கிறது. இந்தப் பட்டயப் படிப்பை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவர் களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் வீதம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டு (2021-22) மாணவர் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்.19-ஆம் தேதி உலகத் தமி மாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடை பெறும். இதற்கான விண்ணப்பத்தை நிறுவன வலைத் தளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தேரிலும் பெற்றுக் கொள்ளலாம். 

வயது வரம்பு இல்லை: 

இந்தப் படிப்புக்கான சேர்க் கைக் கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது.


Post a Comment

أحدث أقدم

Search here!