திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஆங்கிலம் படிக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருச்சி என்ஐடி இயக்குநர் மினிஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்ச கம் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கிடையே வேறுபாடுகளை களையும் வகையில், திருச்சி என்ஐடியில் கடந்த ஆண்டு முதுநிலை ஆங் சிலம் பட்டப்படிப்பு தொடங்கப் பட்டது. இந்த பட்டப்படிப்பு மாணவர் களுக்கு நடைமுறை பாடத்திட் டத்தை உயர் தொழில் முறைக் கல்விகேற்ப வழங்குகிறது. 

மாணவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு, தங்களின் நுண் சிந்தனை மற்றும் படைப்பாக்க சிந்தனை திறன்களுடன் உயர் தரவரிசை சிந்தனை திறன் களையும் வளர்த்துக் கொள்ள லாம், திருச்சி என்ஐடியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை ஏப். 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் என்ஐடியில் சமர்ப் பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு maenglishriti@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 91860 01130 என்ற செல்போன் எண்ணுக்கோ தொடர்பு கொள்ள லாம். http://admission.nittedu/ me2021/ என்ற இணைதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!