கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்களை நியமிக்க முடிவு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரம் டைந்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ளும் விதமாக கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவர்க ளையும், செவிலியர்களையும் நிய மிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடம் பதித்த கரோனாவுக்கு இதுவரை 9,47,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமி ழக அரசு முன்னெடுத்த நடவடிக் கைகள் காரணமாக, தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட டது. மார்ச் முதல் வாரம் வரை யில் நாள் தோறும் 400 பேர் வரை மட்டுமே தொற்று உறுதி செய்யப் பட்டது. இந்த நிலையில், கரோனா பர வல் அண்மையில் அதிதீவிரமானது. 

அதன் விளைவாக கடந்த ஒருமாதத்துக்குள் 400-இலிருந்து 6958-ஆக தினசரி பாதிப்பு அதிக ரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி யன்று 685 பேருக்கு புதிதாகப் பாதிப்புகண்டறியப்பட்டுள்ளன. அப்போது மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,57,602-ஆக இருந் தது. ஒரே மாதத்தில் அதைவிட 85 ஆயிரம் பேருக்கு கூடுதலா கப் பாதிப்பு உறுதி செய்யப்பட் டுள்ளது. இந்தச் சூழலை எதிர் கொள்ள சில சிறப்பு நடவடிக்கை கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின் றன. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறிய தாவது:  

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சுகாதாரக் கட்ட மைப்பு வசதிகள் சிறப்புற உள் மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த முள்ள படுக்கைகளில் 30 சதவீ தம் மட்டுமே நிரம்பியுள்ளன. படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. விலை உயர்ந்த ரெம்டெ சிவிர் உள்ளிட்ட மருந்துகளும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. கடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் பணியில் தொடர்கின்றனர். 

இதுதவிர, கூடுதலாக மருத்து வர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பனர்களும் போதிய அளவில் உள்ளனர். இந்திய மருத்துவ சங்கமும், தனி யார் செவிலியர் கல்லூரிகளிலும் மருத்துவர்கள், செவிலியர்களை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனர். கரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைக ளும் எடுக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை. தகுதியுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும் என்றார்.


Post a Comment

أحدث أقدم

Search here!