ஐ.பி., கல்லுாரி தேர்வுகள் ரத்து!!! 


புதுடில்லி, ஏப். 16- 
கொரோனா பரவலையொட்டி, இந்தியாவில் செயல்படும், ஐ.பி., கல்லுாரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில், 185 கல்லுாரிகளில், ஐ.பி., எனப் படும், சர்வதேச பாடத் திட்டத்தை பின்பற்றி, மாணவர்களுக்கு இளங்கலை பட்டம் வழங்கப்ப டுகிறது. இத்தகைய கல்லுாரிகளில், வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அல்லது பணி மாறுதலையொட்டி வெளிநாடுகளுக்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகள் படிக்கின்றனர். 
இந்நிலையில், ஐ.பி., நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: இந்தியாவில் கொரோனா அதிகரித்திருப்பதால், சர்வதேசபாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து கல்லுாரி நிர்வாகங்களுக்கும் தேர்வு நடத்த வேண் டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவ ரியில் தெரிவித்தபடி, மாணவர்களின் கல்வி மதிப் பீட்டின் அடிப்படையில் பட்டம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.!!!

Post a Comment

أحدث أقدم

Search here!