கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைப்பது தொடரபாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை நடத்துகிறார். 


புது தில்லியில் இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொள்கிறார். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை வைத்திருந்தனர். 

மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தனர். கோரிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மே மாதம் நடைபெறவுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 13,500-க்கும் மேல் பதிவாகியுள்ள நிலையில், 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும், சிபிஎஸ்இ தோ்வுகளை மே 4-ஆம் தேதி முதல் நடத்த முடிவெடுத்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. SOURCE NEWS

Post a Comment

أحدث أقدم

Search here!