கோடைக்காலத்தில், வனம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், தீ விபத்தால் ஏற்படும் பாதிப்பு களை குறைக்கும் வகையில், கல்லுாரி மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பல நேரங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் தீப்பரவல் அதிகரிப்பதோடு, பாதிப்பும் அதிகரிக்கிறது. 


இச்சூழலை சமாளிக்க, கல்லுாரி மாணவர்களுக்கு, தீ தடுப்பு பயிற்சி வழங்கி, அவர்களை இப்பணியில் ஈடுபடுத்த தீயணைப்பு துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு, தீ தடுப்பு பயிற்சி வழங்குகின்றனர். 
தீ விபத்து ஏற்பட்டால் தகவலை முதலில் தெரிவிப்பது, அதன் பின் அதை எவ்வாறு அணைப்பது உள்ளிட்ட பயிற்சிகள், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள், அருகேயுள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சென்று, பயிற்சி பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!