வாகனம் ஓட்டிச் செல்லும் போது துாங்கினால், டிரைவரை எழுப்பும் வகையிலான கருவியை, ஐதராபாதில் உள்ள, ராணுவ மின்னணு மற்றும் மெகானிகல் பொறியியல் கல்லுாரி கண்டுபிடித்துள்ளது.


நாட்டில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு, வாகனத்தை ஓட்டும் போது, டிரைவர் துாங்கிவிடுவது, முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதை தடுக்க, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, எச்.சி.இ.எம்.இ., எனப்படும், ராணுவ மின்னணு மற்றும் மெகானிகல் பொறியியல் கல்லுாரி, கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது குறித்து, கல்லுாரியின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

வாகனம் ஓட்டும் போது, துாக்கத்தில், டிரைவரின் இமைகள் மூடினால், ஒலி எழுப்பி, அவரை விழிப்படையச் செய்யும் கருவியை வடிவமைத்துள்ளோம். டிரைவர் இருக்கைக்கு அருகே, அவரது விழிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும். இமைகள் மூடும் போது, கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட, 'ஐ ட்ராக்கர்' எனப்படும் கருவி, ஒலி எழுப்பி, டிரைவரை விழிப்படையச் செய்யும். 

பகல், இரவு என, எல்லா நேரங்களிலும், இந்த கருவி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கருவியை, தெலுங்கானா மாநில, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகத்துறை முதன்மை செயலரிடம், கல்லுாரி நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. போக்குவரத்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி, வாகனங்களில் இந்த கருவியை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!