பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு வினாத்தாள் மாதிரி வெளியிட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது. 

பிளஸ் 2 தவிர, மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. மே, 3 முதல், 21 வரை, தேர்வுகள் நடைபெற உள்ளன. 
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 16ம் தேதி முதல், செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளன. இந்த தேர்வுகளை, இரண்டு வாரங்களுக்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியலை, தேர்வு துறையில் தாக்கல் செய்ய, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாதிரியை வெளியிட வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு, இரண்டு முறை ஆயத்த தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. எனவே, வினாத்தாள் மாதிரி மற்றும் மதிப்பெண் முறையை, பள்ளி கல்வித் துறை அறிவிக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

أحدث أقدم

Search here!