DGE - HSE இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மே 2021 - தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரை - அரசுத் தேர்வுகள் இயக்குநர்


அனுப்புநர் 

முனைவர். சி. உஷாராணி, எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி., 
அரசுத் தேர்வுகள் இயக்குநர், 
சென்னை - 600 006. 

பெறுநர் 

அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள். 

ந.க.எண். 000002/ H1 / 2021 நாள்: 31.03.2021 

ஐயா/அம்மையீர், 

பொருள் : 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மே 2021 - தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் முகப்புத்தாட்கள் வழங்குவதற்கான அறிவுரை வழங்குதல் சார்பு. *** 

நடைபெறவுள்ள மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மை விடைத்தாட்களின் வகைகள் மற்றும் வரைகட்டத்தாள், வரைபடங்கள் ஆகியவற்றை முதன்மை விடைத்தாளுடன் வைத்து தைக்க வேண்டிய பக்கங்களின் விவரம் ஆகியவை, தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பி வைக்கப்படுகிறது. 

இணைப்பு : மேற்குறிப்பிட்டவாறு 

ஓம்./- இயக்குநர் 

நகல் : 

1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் இவ்விவரத்தினை அனைத்து மேல்நிலை தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் - தகவலுக்காக வழங்கப்படுகிறது. 

3. கண்காணிப்பாளர், 'K' பிரிவு (அலுவலகம்). 

(2)

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே 2021 
விடைத்தாட்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் 

1 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முதன்மை விடைத்தாள் 

மொழிப்பாடங்களுக்கு (Language and English) HSE-LANGUAGE என்று குறிப்பிடப்பட்டுள்ள 30 பக்கங்கள் கொண்ட புள்ளியிடப்பட்ட / கோடிடப்பட்ட முதன்மை விடைத்தாட்களை தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். 

தேர்வர்கள் மொழிப்பாடங்களுக்கு கூடுதல் விடைத்தாள் கோரினால் புள்ளியிடப்பட்ட | கோடிடப்பட்ட கூடுதல் விடைத்தாட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். 

2 உயிரியல் பாடத்தைப் பொறுத்தவரையில், உயிரி-தாவரவியல் மற்றும் உயிரி- விலங்கியல் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே இரண்டு முதன்மை விடைத் ட்கள் வழங்க ஆனால் ஒரே ஒரு Topsheet மட்டுமே வழங்கப்படும். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கு HSE - BIO - BOTANY &HSE- BIO - ZOOLOGY என்று குறிப்பிட்டுள்ள முதன்மை விடைத்தாளையும் தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். 

முகப்புத்தாள் மற்றும் முதன்மை விடைத்தாட்கள் தைக்க வேண்டிய முறை 

1. முதலில் முகப்புத்தாள் வைக்கப்பட வேண்டும். 
2. அதன் கீழ் HSE - BIO- BOTANY முதன்மை விடைத்தாள் வைக்கப்பட வேண்டும். 
3. அதன் கீழ் Bio-Botany பாடத்திற்கென பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கோடிடப்படாத வகையிலான 4 பக்கங்கள் கொண்ட ஒரே ஒரு கூடுதல் விடைத்தாள் மட்டுமே வைக்கப்பட வேண்டும் 4. அதன் கீழ் HSE - BIO - ZOOLOGY முதன்மை விடைத்தாள் வைக்கப்பட வேண்டும் 

(குறிப்பு: 14 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாட்கள் பயன்படுத்தப்பட்டால், BIO BOTANY முதன்மை விடைத்தாளுக்குப் பின்னர் ஒரு கூடுதல் விடைத்தாளை வைத்துத் தைக்க வேண்டும்.) - மேற்படி 4 பகுதிகளையும் ஒன்றாகத் தைத்து ஒரே விடைத்தாள் புத்தகமாக தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். BIO-ZOOLOGY பாடத்திற்குத் தேர்வர்கள் கோரினால் கூடுதல் விடைத்தாட்கள் வழங்கலாம். அவ்வாறு பெற்றுப் பயன்படுத்தப்படும் BIO-ZOOLOGY பாட கூடுதல் விடைத்தாளானது மேற்படி வடைத்தாள் புத்தகத்தின் அடியில் வைத்து துளையிட்டு நூல் கொண்டு இணைத்து கட்டப்பட வேண்டும். இது குறித்து தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். 

3. மேல்நிலைத் தேர்வில் கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத்திற்கான விடைத்தாள் 1 முதல் 14 பக்கங்கள் கோடிடப்படாமலும், மீதமுள்ள பக்கங்கள் கோடிடப்பட்டும் இருக்கும். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கு HSE-ACCOUNTANCY என்று குறிப்பிட்டுள்ள முதன்மை விடைத்தாளை தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். கணக்குப்பதிவியல் பாடத் தேர்விற்கு பிரத்யோகமாக கணக்கீடுகள் செய்வதற்கு ஏதுவான கட்டங்கள் இடப்பட்ட கூடுதல் விடைத்தாட்கள் வழங்கப்பட வேண்டும். 

4. மேல்நிலைத் தேர்வில் இதரப் பாடங்களுக்கு (கணினி அறிவியல் பாடம் உட்பட) HSE MAIN என்று குறிப்பிட்டுள்ள 30 பக்கங்கள் அடங்கிய முதன்மை விடைத்தாட்களை பயன்படுத்த வேண்டும். 

5. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக தேவையான கூடுதல் விடைத்தாட்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும். தேர்வெழுதும் தேர்வர்கள் முதன்மை விடைத்தாட்கள் முழுவதும் எழுதிய பிறகு கூடுதல் விடைத்தாட்கள் வழங்கப்பட வேண்டும்.

 6. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் வரலாறு பாடத் தேர்வுக்கு முதன்மை விடைத்தாளுடன் கடைசித் தாளுக்கு முன்னர் ஒரு இந்திய வரைபடம் மற்றும் ஒரு உலக புறவரி வரைபடம் (One World Out Line Map) ஆகியவற்றை வைத்து தைத்து வழங்க வேண்டும். 

7. புவியியல் பாடத் தேர்வுக்கு முதன்மை விடைத்தாளுடன் ஒரு உலக புறவரி வரைபடம் (One World Out Line Map) வரைபடத்தினையும் கடைசி தாளுக்கு முன்னர் வைத்து தைத்து வழங்க வேண்டும். 

8. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் (Business Mathematics and Statistics) பாடத்திற்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாளுடன் ஒரு வரைகட்டத்தாளினை (Graph Sheet) விடைத்தாளின் கடைசி தாளுக்கு முன்னர் வைத்து தைத்து வழங்க வேண்டும். 

9 மேல்நிலை இரண்டாமாண்டு ஆண்டு பொதுத் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு புள்ளியியல் (Statistics) பாடத் 

: //3// 

10. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் சிறப்பு உறைகளைப் பொறுத்தமட்டில் 20 விடைத்தாட்களுக்கு ஒரு சிறப்பு உறை என்ற வீதத்தில் கணக்கிட்டு வழங்கப்படவேண்டும். பாடத்திட்ட வாரியாகவும், மொழிப்பாடங்களுக்கு மொழிவாரியாகவும் சிறப்பு உறைகள் பயன்படுத்தவேண்டும். பிற பாடங்களுக்கு பயிற்றுமொழிவாரியாக தனித்தனி உறைகள் பயன்படுத்தப்படவேண்டும். கூடுதல் விடைத்தாட்கள் குறித்த அறிவுரை:- கோடிட்ட முதன்மை விடைத்தாட்கள் பயன்படுத்தப்படும் தேர்வுகளுக்கு கோடிட்ட கூடுதல் விடைத்தாட்களையும், கோடிடப்படாத முதன்மை விடைத்தாட்கள் பயன்படுத்தப்படும் தேர்வுகளுக்கு கோடிடப்படாத கூடுதல் விடைத்தாட்களையும் பயன்படுத்த வேண்டும். மேலும் கணக்குப்பதிவியல் தேர்விற்கு பிரத்யேகமாக கணக்கீடுகள் செய்வதற்கு ஏதுவான கட்டங்கள் இடப்பட்ட கூடுதல் விடைத்தாட்கள் வழங்கப்பட வேண்டும். 

11 முகப்புத்தாட்கள் தைக்கும் முறை 

மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதும் ஒவ்வொரு தேர்வருக்கும் அன்னார் தேர்வெழுதும் பாடம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான முகப்புச்சீட்டுகள் (Topsheets) வழங்கப்பட்டுள்ளன. அம்முகப்புச்சீட்டுகளை தையல் இயந்திரத்தின் உதவியுடன் 16-ம் எண் ஊசியைப் பயன்படுத்தி வெள்ளை நிற 3ply நூல் (cotton) கொண்டு “6 SPI" (Stitches Per Inch) என்ற அளவில் தைக்க வேண்டும்.  






You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

أحدث أقدم

Search here!