DSE - 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் அகரம் "விதை கல்வி உதவி திட்டத்திற்கு" விண்ணப்பிக்கலாம்

பொருள்: 

பள்ளிக்கல்வி - அகரம் பவுன்டேசன்- 2020-2021 ஆம் கல்வி ஆண்டு- அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் அகரம் "விதை கல்வி உதவி திட்டத்திற்கு" விண்ணப்பித்திட அனுமதி வேண்டி கடிதம் பெறப்பட்டுள்ளது- அனுமதி ஆணை வழங்குதல் தொடர்பாக 



அகரம் அறக்கட்டளையிடமிருந்து பெறப்பட்ட கடிதம், நாள்:09.03.2021 பார்வை: பார்வையில் காணும் கடிதத்தில், அகரம் அறக்கட்டளை நிறுவனம், அகரம் விதைத் திட்டம்-2021 எனும் திட்டத்தினை, இக்கல்வி ஆண்டில் (2020-2021) செயல்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் , பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, கலை என கல்வி இணைச் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன் பெற்ற மாணவர்கள் என தேர்ந்தெடுத்து, அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்திலுள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணக்கர்கள், மேற்படி அகரம் விதைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏதுவாக, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும், பள்ளிகளில் கற்றல் / கற்பித்தல் பாதிக்காத வகையில் சார்ந்த நிறுவனத்திற்கு 


-அறம் செய விரும்பு மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கு, அகரம் அறக்கட்டளையின் வணக்கங்கள் ! கிராமங்களின் எளிய மனிதர்களின் நம்பிக்கை அரசுப் பள்ளிகளும், ஆசிரியர்களுமே மாணவர்களை தினசரி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. ஆதலால் தங்களின் உதவியை நாடுகிறோம். 2020 - 2021-ஆம் கல்வி ஆண்டில், +2 பயிலும் மாணவர்களில் முதல் தலைமுறை மாணவர்கள், பொருளாதார மற்றும் சமூக சூழலால் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாணவர் கைப்பட எழுதிய குடும்ப சூழ்நிலை கடிதத்துடன், விதைத் திட்ட விண்ணப்பப் படிவத்தை (இணைப்பில் உள்ளது) நகலெடுத்து பூர்த்தி செய்து, தேவைப்படும் சான்றிதழ் நகல்கள் சேர்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
* இவ்வாண்டு பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் கடந்த ஆண்டு பிளஸ்-டூ முடித்து, பொருளாதார சூழலால் கல்லூரிச் சேர்க்கை பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். +2 விதைத் திட்டத்திற்கு விண்ணப்பித்திடும் முறை விண்ணப்பதாரார் தன் குடும்பச் சூழலை விளக்கி தன் கைப்பட விண்ணப்பக் கடிதம் எழுதவேண்டும் (பெற்றோர் செய்யும் வேலை, உடன்பிறந்தவர்கள் படிப்பு மற்றும் வேலை போன்ற விவரங்களுடன்) 
2 விண்ணப்பதாராரின் சுய விவரங்கள், தெளிவான தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட வேண்டும் 
3. விண்ணப்பதாராரின் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல் 4 +1 பொதுத் தேர்வு மதிப்பெண் சான்று நகல் (1 இணைய மதிப்பெண் சான்றே இருப்பின் அதன் நகல் அனுப்பலாம்) 5. குடும்ப அட்டை - நகல் 6, சாதி சான்றிதழ்- நகல் 7. இணைப்பில் இருக்கும் 'அகரம் விதைத்திட்ட விண்ணப்பப் படிவத்தை', நகல் எடுத்து பூர்த்தி செய்து கைப்பட எழுதிய கடிதம் மற்றும் தேவைப்படும் மேற்கண்ட சான்றிதழ் நகல்களுடன் Read more .........







Post a Comment

أحدث أقدم

Search here!