கரோனா வைரஸ் தொற்று பரவல் கால கட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது. ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள வழிமுறைகள் விவரம் வருமாறு: 



கரோனா தொற்று நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களை முழு கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும். மேலும், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக்கூடாது. 


அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளை கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும். பேராசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தற்போது இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வரக் கூடிய நிலையில், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் களை அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியிலுள்ள மற்ற கல்லூரிகளில் இணையதள வசதியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. 

 இதேபோன்று 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான மாண வர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முதல் கட்ட கலந் தாய்வையும், செப்டம்பர் 9-ம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!