ஆண்ட்ராய்டு செயலி உருவாக்க மும்பை ஐஐடி இலவச பயிற்சி : 

ஆண்ட்ராய்டு செல்போன் செயலிகள் உருவாக்குவதற்கான பயிற்சியை மும்பை ஐஐடி இணையவழியில் இலவசமாக வழங்குகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு செல்போன் மக்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. இதனால்,ஏராளமான ஆண்ட்ராய்டு செயலிகளும் (App) உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் அதிகமாகி வருகிறது. 

MUST READ 

இந்நிலையில், ஆண்ட்ராய்டு செல்போனில் பயன்படுத்தும் செயலிகளை உருவாக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரத்துடன் மும்பை ஐஐடி இலவச பயிற்சி அளிக்க உள்ளது. அதன்படி, விருப்பம் உள்ள உயர்கல்வி மாணவர்கள் மத்திய அரசின் ஸ்வயம்இணையதளத்தில் (https://swayam.gov.in) பதிவு செய்யவேண்டும். இந்த இலவச இணையவழி பயிற்சி 8 வாரம் அளிக்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை http://iitb.ac.in என்ற "இணையதளம்" மூலமாக அறிந்துகொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!