கரோனா பரவல் காரணமாக நேரடி பருவத் தேர்வுகளை கல்லூரிகள் ஒத்திவைக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

MUST READ 

நாட்டின் பல்வேறு பகுதிகளில்கரோனா 2-வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலை கருத்தில்கொண்டு நடப்பு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நேரடி பருவத் தேர்வுகளை பல்கலைக்கழங்கள் ஒத்திவைக்க வேண்டும். அதற்கு மாற்றாக இணையவழியில் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். தற்போதைய நோய்த்தொற்று பரவல் சூழலை கண்காணித்து உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும்.இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!