நலிவடைந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் 


கடலுார், மே 10- 

நலிவடைந்த நிலையில் உள்ள சிறந்த விளை யாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் 3,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

இதற்கான விண்ணப்பங்களை ஆணையத்தின் www.sdat.in.gou.in இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஓய்வூதியத்திற்கான தகுதிகள் வருமாறு: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்றிருக்க வேண்டும். இப்போட்டி களில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2021 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி யடைந்தவராக இருத்தல் வேண்டும். 

விண்ணப்ப தாரரின் மாத வருமானம் 6,000 ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய் வூதியம் பெறத் தகுதி இல்லை. முதியோருக்கான (வெட்ரான், மாஸ்டர், ஸ்போர்ட்ஸ் மீட்) விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூ தியம் பெற தகுதியில்லை. இணைய தளம் மூலம் வரும் 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

أحدث أقدم

Search here!