PRESS RELEASE 244 - OFF THE STATE TRANSPORT AUTHORITY ON CAP ON ISSUE OF DRIVING LICENSE, REGISTRATION ETC, DURING PANDEMIC


செய்தி வெளியீடு எண்: 244 நாள்:06.05.2021 
செய்தி வெளியீடு 

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு 03.05.2021 அன்று வெளியிட்ட அரசாணை எண்.364-ல் புதிய கட்டுப்பாடுகள் 06.05.2021 முதல் 20.05.2021 வரை விதிக்கப்பட்டது. அதன்படி அரசு அலுவலகங்களில் அதிகபட்சமாக 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையினை பொதுமக்கள் ஓட்டுநர்கள் வாகன உரிமையாளர்கள் தங்களது சேவைகளுக்கு போக்குவரத்து அரசு அலுவலகங்களுக்கு வந்து பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான இதர பணிகளுக்கு பயன்பெற்று வருகின்றனர். 50 விழுக்காடு அரசு பணியாளர்களுடன் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து பணிகளின் சேவைகளை கொரோனா நோய் தொற்று பரவாமல் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விண்ணப்பதாரர்களை சாரதி இணைய தளத்தில் 50 விழுக்காடுகள் வரை முன்பதிவுகள் பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளன. உரிமம் வழங்குவதில் 40 விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே பழகுநர் அனுமதிக்கப்படுவர். 

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் தொடர்பான இதர பணிகளுக்கு 40 விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டுநர் உரிமம் தேர்வில் 30 விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கொரோனா நோய் தொற்றை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் பொது மக்களுக்கு சேவையாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

கூடுதல் தலைமை செயலாளர் போக்குவரத்து ஆணையர், 
சேப்பாக்கம், 
சென்னை-5. 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Post a Comment

أحدث أقدم

Search here!