குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் ╰•★★ Join Our WhatsApp ★★•╯ 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

 25 சதவீதம் இடஒதுக்கீடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 பிரிவு12 (1) (சி) -ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான (2021-22) மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது. 

 அதன்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்பில் பள்ளிவாரியாக உள்ள மொத்த இடங்கள் மற்றும் அவற்றில் 25 சதவீதம் இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், உள்ளூர் செய்தித்தாள்கள், மாவட்ட, கல்வி மாவட்ட, வட்டார அளவில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் அலுவலக தகவல் பலகைகள், சம்பந்தப்பட்ட பள்ளி பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்ய வேண்டும். அடுத்த மாதம் 5-ந்தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் அந்தந்த பள்ளிகளில் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக்கல்வித் துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான அனைத்து பணிகளையும் செய்வதற்கான வசதிகள், அனைத்து அலுவலகங்களிலும் இருக்கிறதா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். 

தகுதிவாய்ந்தவர்கள் யார்? என்ற விவரங்கள் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி மாலை 5 மணிக்குள் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் தகுதியிழந்த விண்ணப்பங்களும், அதற்கான காரணங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 10-ந்தேதி தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்து 25 சதவீதம் இடஒதுக்கீட்டு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதுசம்பந்தமாக நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை ஆகஸ்டு 14-ந்தேதிக்குள் கல்வித்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு மற்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!