என்ஜினீயரிங் படிப்பில் சேர முதல் நாளில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பம் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் சான்றிதழ் பதிவேற்றம் 

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த விண்ணப்ப பதிவில், மாணவ-மாணவிகள் தங்களுடைய முழு விவரங்கள், மதிப்பெண்கள், விண்ணப்ப கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் ஆகியவற்றை செய்ய வேண்டும். முதல் நாளான நேற்று 25 ஆயிரத்து 611 பேர் (நேற்று மாலை நேர தகவல்படி) விண்ணப்பித்து இருப்பதாகவும், இவர்களில் 10 ஆயிரத்து 84 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், அதில் 5 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகள் சான்றிதழ் பதிவேற்றம் செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 நேற்று தொடங்கிய விண்ணப்ப பதிவு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. விண்ணப்ப பதிவு முடிந்த மறுநாள் ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் கலந்தாய்வு செப்டம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. மருத்துவ படிப்பு போல தொழில்நுட்ப படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வாய்ப்பு இருப்பதாகவே பேசப்படுகிறது. இதுகுறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

أحدث أقدم

Search here!