கணினி ஆசிரியர்களுக்கு பயிற்சி 

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் அரசு நிதியுதவி தொடக்க மற்றும் நடுநிலை என மொத்தம் 60 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது உள்ள கொரோனா காலத்தில் மாணவர்களிடையே நேரடியாக கற்றல் நடைபெற முடியாத சூழல் உள்ளதால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களது பயிற்றுனர்கள் கூகுள் மீட் வழியாக கணினிப்பயிற்சி அளித்து வருகின்றனர். 

இதேபோல் கல்வி தொடர்பான கெயின் மாஸ்டர், போட்டோ வீடியோ கிரியேஷன்ஸ், டெக்ஸ்ஸ்கேனர், ஜாம்போர்டு, சர்வே ஹார்ட், கல்வி 40, ஆன்லைன் கூகுள் ஷீட் ஆகியவை மூலம் வினாத்தாள் தயாரித்தல் மற்றும் செல்போன் ஆன்லைன்வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்திதேர்வுகள் நடத்துவது, பின்னர் ஆன்லைன் வழியாகவே விடைத்தாளை பெற்று திருத்தம் செய்து மதிப்பிடுவது, பாடத்திட்டங்களை வீடியோ பாடமாக மாற்றுவது என பல்வேறு செயல்பாடுகளை ஆசிரியர்களுக்கு பயிற்றுனர்கள் வகுப்பு நடத்தினர். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் எலிசா, உதவி ஆசிரியர்கள் மில்லர்ராஜ், ஹரிஹரன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். 



Post a Comment

أحدث أقدم

Search here!