SCERT ஜூலை மாதத்திற்கான ஒப்படைவுகள் (Assignments) தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

அனுப்புநர் 

ஆணையர், 

பள்ளிக்கல்வி இயக்ககம், 

பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள். சென்னை. நக.எண். ந.க.எண். 045105/பிடி 01/2021, நாள் : 25.08.2021 

பொருள் : 

மாநிலக கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களுக்கு அலகு வாரியாக ஒப்படைவுகள் (Assignments) தயாரித்தல் - பள்ளிகளுக்கு அனுப்புதல் சார்பு 

பார்வை : 

பள்ளிக் கல்வித்துறை, முதன்மைச் செயலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம், நாள்:20.07.2021 காலமாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட மூடப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு மாணவர்களின் கற்றல் அடைவு பாதிக்காத வண்ணம் QR code- உடன் கூடிய பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்குதல், 1 முதல் 12 வகுப்புகளுக்கான பாடப்பொருள் சார்ந்த காணொலிகளை கல்வித் தொலைக்காட்சி மற்றும் 9 தனியார் தொலைக்காட்சிகள், 4 DTH அலைவரிசை மற்றும் 6 கேபின் டிவி நெட்வொர்க் ஆகியவற்றில் ஒளிபரப்பு செய்தல், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வானொலிப் பாடங்களை அகில இந்திய வானொலி (AIR) மூலம் ஒளிப்பரப்புதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. 

குறிப்பாக கலவித் தொலைக்காட்சியில் அனைத்து வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களுக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை கால அட்டவணை தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு மாணவர்கள் குறித்த நேரத்தில் அவர்களுக்கான காணொலிகளை கண்டு பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது





Post a Comment

أحدث أقدم

Search here!