TNPSC தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம் தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு எண். 38/2021 நாள் 05/08/2021 தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி 1)ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில், தங்களது இணையவழி விண்ணப்பத்தில், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும், தாங்கள் தமிழ் வழியில் பயின்ற என்றிதழ் PSTM Certificate) பெறுவதற்கான படிவங்கள், தேர்வாணைய இணையதளத்தில் கீழ்க்காணும் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. . விண்ணப்பதாரர்களுக்கான (i) நியமனம் அறிவிக்கை அறிவுரைகள் (Instructions to Applicants) (ii) படிவங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் விண்ணப்பதாரர் தொடர்பான படிவங்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படிவம் (வரிசை எண். 6) > 


2. விண்ணப்பதாரர்கள், இப்படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, புதிய வடிவத்தில் உள்ள தமிழ்வழியில் பயின்ற சான்றிதழை (PSTM Certificate) உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100 KB முதல் 200 KB அளவில் Scan செய்து அரசு கேபிள் டி.வி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 419 3. மேலும், இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படின், தேர்வாணையத்தின் 1800 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு (Toll free Number) அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., செயலாளர்.

Post a Comment

أحدث أقدم

Search here!