இன்றைய 10 சொற்கள்!
1. Academy (அகாடமி) - கல்விக்கழகம்.
அவர் நீண்ட காலமாக இந்த கல்விக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
He is working in this academy far too long.
2. Curriculum (கரிகுளம்) - பாடத்திட்டம்.
இந்த பாடங்கள் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் வரும்.
These subjects will come under in school curriculum.
3. Lecturer (லெக்சுரர்) - விரிவுரையாளர்.
விரிவுரையாளர் இந்த வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
The lecturer has been changed for this class.
4. Seminar (செமினார்) - கருத்தரங்கு.
அந்த கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Over 500 people attended the seminar.
5. Calculator (கால்குலேட்டர்) - கணிப்பான்.
முதல் திட நிலை மிண்ணனு கணிப்பான் 1960இல் உருவாக்கப்பட்டது.
The first solid state electronic calculator was created in 1960.
6. Inspection (இன்ஸ்பெக்ஷன்) - மேற்பார்வை.
மேற்பார்வை மிகவும் மேலோட்டமாக இருந்தது.
The inspection was quite superficial.
7. Glossary (க்ளோசரி) - சொற்களஞ்சியம்.
சொற்களஞ்சியம் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்திற்கு பின்னர் கொடுக்கப்பட்டுள்ளது.
Glossary is given after the last chapter of the book.
8. Protractor (ப்ரோட்ரக்டர்) - கோணமானி.
கோணமானி அளவீட்டு கருவியாகும்.
A protractor is a measuring instrument.
9. Thesaurus (தெசாரெஸ்) - நிகண்டு.
ஒரு வார்த்தைக்கான பொருள்கள் மற்றும் எதிர்ச்சொற்களின் தொகுப்பு நிகண்டு ஆகும்.
A thesaurus is a collection of synonyms and antonyms of a word.
10. Vocabulary (வொக்காபுலரி) - சொல்லகராதி.
இந்த புத்தகத்தில் சொல்லகராதி திறன்களை அதிகரிக்க குறிப்புகள் உள்ளன.
This book contains tips to increase vocabulary skills.
No comments:
Post a Comment