தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பதிவாளர் கு.ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

 திறந்தநிலை பல்கலை.யில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகள் உட்பட 150 படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதற்கான 2021-22-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கல்வித் தகுதிகள், கட்டணம் உட்பட அனைத்து விவரங்களும் https://tnou.ac.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் நலன்கருதி, சென்னை (பல்கலைக்கழக வளாகம்), திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தருமபுரி, திருநெல்வேலி, விழுப்புரம், ஊட்டி ஆகிய 8 மண்டல மையங்களிலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் சேர்க்கை நடத்தப்படுகிறது.


ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 9345913378 / 044-24306664 / 24306615 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் tnouadmission@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!