3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான அடைவு ஆய்வு (NAS 2021) ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் - 

சேலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) அவர்களின் செயல்முறைகள் 

முன்னிலை: 

முனைவர் இரா.முருகன், எம்.எஸ்சி, பி.எட், எம்.பில்., பிஎச்டி 
நக.எண் 1182 QMT ஓபக/2021 நாள்: 102021 

பொருள்: 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சேலம் மாவட்டம் கல்வித் தர மேம்பாடு (QMT) 2021-22 - 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான அடைவு ஆய்வு (NAS 2021) ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பு. 

பார்வை: 

National Achievement Survey 2021 Technical Note on Assessment Framework 

மேற்காண் பார்வையின்படி தேசிய அளவிலான அடைவு ஆய்வு மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் 12112021 அன்று 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. 

இவ்வாய்விற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 200 பள்ளிகள் தெரிவு செய்து மொழி பாடம், கணிதம், சூழ்நிலை அறிவியல் | அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளது. தேசிய அளவிலான அடைவு ஆய்வின் நோக்கம் கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளதால் அக்குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படவுள்ளது. 

இப்பேரிடர் காலத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு குறிப்பாக 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் கற்றல் அடைவு மற்றும் கற்றல் விளைவுகள் பின்தங்கியுள்ள விவரம் சார்ந்தும் இவ்வாய்வின் மூலம் கண்டறியப்படவுள்ளது. 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் அடிப்படை மொழித் திறன் (Fundamental Literacy) மற்றும் அடிப்படை கணித திறன்கள் (Numeracy) சார்ந்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகவே இவ்வாய்விற்கு 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் தவறாது பின்பற்றி தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. . 









Post a Comment

أحدث أقدم

Search here!