வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை 


வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1-7-2016 முதல் 30-9-2016 வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 

பத்தாம் வகுப்பு தொடங்கி பட்டப்படிப்பு முடித்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். www.tnvelaivaaippu.gov.in அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் 

அதேபோல், உதவித் தொகை பெறுபவர்கள் ஓராண்டு கடந்த நிலையில் பணியில் இல்லை என்றசுய உறுதி மொழி படிவத்தை அளிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட விவரங்களுடன் சமர்ப்பிக்காவிட்டால் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!