'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தின் கலை பயணத்தை, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற பெயரில், புதிய கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இதன்படி, 200 கோடி ரூபாய் நிதி உதவியுடன், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்கான இணையதளம் மற்றும் கலைப் பயணத்தை, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

பள்ளிகளின் நேரம் போக, மாலை 5:00 முதல் 7:00 மணி வரை தன்னார்வலர்கள் வழியே, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், கரகாட்டம், பொம்மலாட்டம், சைக்கிள் பேரணி, வீதி நாடகம் போன்றவற்றின் வாயிலாக, விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஒரு வாரத்தில் துவங்கி வைக்க உள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!