அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளில் செயல்படும், கே.ஜி., வகுப்புகள் மட்டும் திறக்கப்படாது; மற்ற வகுப்புகள் செயல்படும்' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 19 மாதங்களாக பிரீ.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படவில்லை; ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், கொரோனா பரவல் பெருமளவு குறைந்து உள்ளதால், சினிமா தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், மதுக்கடை 'பார்'கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன. 

எனவே, பள்ளிகளையும் திறக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வரும் 1ம் தேதியிலிருந்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாதுஎன அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு, 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடக்கும்.அதே நேரம், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், நர்சரி வகுப்புகளான பிரீ.கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., தவிர, ஒன்றாம் வகுப்பில் இருந்து மற்ற வகுப்புகளை நடத்தி கொள்ளலாம். 


'பிளே ஸ்கூல்'களாக செயல்படும் மழலையர் பள்ளிகளை திறக்கவும் அனுமதியில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

أحدث أقدم

Search here!