அக்.28 முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் இணையவழி தேர்வு 2 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக்கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர்களுக்கான இணையவழி தேர்வுஅக்.28 முதல் 31 வரை 129 மையங்களில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

தேர்வர்களுக்கு புதிய தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். எனவே, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.


இதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலியிடங்களுக்கான தேர்வு அக்டோபர் 28 முதல் 31 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

நாட்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. தேர்வுக்கான தேதிகள்பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று கூறப்பட் டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!