கடலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சிவயோகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட எல்லைக்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் மார்ச் 2014 முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான பருவங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு மையங்கள் மூலம் நேரடியாக வினியோகம் செய்யப்பட்டன. 

இதில் தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் சான்றிதழ்கள் கடலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ளன. எனவே மார்ச் 2014 முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான பருவங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள், வருகிற ஜனவரி மாதத்திற்குள் உரிய ஆதாரங்களுடன், கடலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். 

இல்லையெனில் ரூ.45 மதிப்புள்ள அஞ்சல் வில்லைகள் ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறையுடன், தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் மற்றும் தேர்வு கூட அனுமதி சீட்டின் அச்சு பகர்ப்பு நகலினை இணைத்து அனுப்பி, சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!