தக்காளியின் மருத்துவப் பயன்கள் 


கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். எலும்பை பலமாக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் தோலை பளபளப்பாக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பற்களும், ஈறுகளும் வலிமை பெறும். மலச்சிக்கலை நீக்கும். குடற்புண்களை ஆற்றும். களைப்பைப் போக்கும். 

 ஜீரண சக்தியைத் தரும். சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும். தொற்று நோய்களைத் தவிர்க்கும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது. தக்காளியில் உள்ள சத்துக்கள் : இரும்புச் சத்து - 0.1 மி.கிராம் சுண்ணாம்புச் சத்து - 3.0 மி.கிராம் வைட்டமின் ஏ - 61 மி.கிராம் உடல் சோர்வு நீங்க : தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும். 

 தோல் நோய் குணமாக : நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் நீங்க : காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.

Post a Comment

أحدث أقدم

Search here!