அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 

காசினிக்கீரை- 

சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 

சிறுபசலைக்கீரை- 

சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 

பசலைக்கீரை- 

தசைகளை பலமடையச் செய்யும். 

கொடிபசலைக்கீரை- 

வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 

மஞ்சள் கரிசலை- 

கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். 

குப்பைகீரை- 

பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். 

அரைக்கீரை- 

ஆண்மையை பெருக்கும். 

புளியங்கீரை- 

சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 

பொன்னாங்கன்னி கீரை- 

உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். 

 சுக்கா கீரை- 

ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும். 

 முருங்கைக்கீரை- 

நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

Post a Comment

أحدث أقدم

Search here!