ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் சி. எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். 

ஆரஞ்சு மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும், இதில் நல்ல அளவில் வைட்டமின் சி உள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கோலின் ஆகியவை நிறைந்துள்ளன. ஆரஞ்சு ஆன்ட்டிஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளது, இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். 

இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும், வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும். 

 எலுமிச்சை வகையை சேர்ந்த ஆரஞ்சு பழத்தில், வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இதயத்துக்கு பயன் தரவல்லது. கொழுப்பு சத்தை கரைக்கும் தன்மை கொண்டது. கண் பிரச்னைகளை சரிசெய்கிறது. புற்றுநோயை தடுக்க கூடியதாக அமைகிறது.

Post a Comment

أحدث أقدم

Search here!