தமிழ்நாடு வேளாண் இளநிலை படிப்பு தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி, இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.கோவை வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. 

இதில், 11 இளநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் புதிதாக துவங்கவுள்ள, நான்கு கல்லுாரிகள், தமிழ்வழி பாடப்பிரிவுகள் சேர்த்து, 300 இடங்கள் கூடுதலாக கலந்தாய்வில் சேர்க்கப்படவுள்ளது.

டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது:தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. நவ., 2ல் இணையதளத்தில் திட்டமிட்டப்படி வெளியாகும். அனைவரும் தேர்ச்சி பெற்று இருப்பதால், கடந்தாண்டை காட்டிலும், 'கட்-ஆப்' கூடுதலாக இருக்கும்.தரவரிசை பட்டியலில் இடஒதுக்கீடு, பொது பிரிவு அடிப்படையில் தரத்தை தெரிந்துகொண்டு மாணவர்கள் தனக்கு எந்த கல்லுாரி கிடைக்கும், எந்த துறை கிடைக்கும் என்பதை எளிதாக கணிக்க முடியும். 

கலந்தாய்வு தேதி பிற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Post a Comment

أحدث أقدم

Search here!