பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:- 

2021-22-ம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையில், கிராமப்புறத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில், கிராமப்புற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதன்படி, மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் உயர்த்தி வழங்கலாம் என்று கோரியுள்ளார். அந்த கருத்துருவினை ஆய்வு செய்து, கிராமப்புறங்களில் 3-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பெற்றோருடைய ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!