'ஸ்வயம்' தளத்தில் 590 சான்றிதழ் படிப்புகள் SOURCE NEWS

சென்னை ஐஐடி தகவல் சென்னை, ஜன. 19: ‘ஸ்வயம்' இணையதளத்தில் வழங்கப்படும் 590-க்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளை ஆன்லைனில் இலவச மாக படிக்கலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. என்பிடி இஎல் எனப்படும் தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சென்னை ஐஐடி உள்ளிட்ட ஐஐடி-க்கள் மற் றும் பெங்களூர் ஐஐஎஸ்சி ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் ஸ்வ யம் இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் ஏராளமான படிப் புகளை இலவசமாக வழங்கி வருகின்றன. 

பொறியியல், அறிவியல், மேலாண்மை, கலை மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரி வுகளில் 593 சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் வெகிக்கில்ஸ், மெஷின் லேர்னிங் பைத் தான், ஜாவா, சி, சி பிளஸ்பிளஸ், பிளாக்செயின் டெக்னாலஜி, இந் துஸ்தானி இசை என பலதரப்பட்டபடிப்புகள் இதில் அடங்கும். 2022 ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் (www.swayam.gov.in/NPTEL) விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரு கின்றன. ஆன்லைன் வாயிலாக இலவசமாக வழங்கப்படும் இந்தச் சான்றிதழ் படிப்புகளில் ஜனவரி 31-ஆம் தேதி வரை சேரலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!