யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I) (சி.டி.எஸ்.) வாயிலாக டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி (100), ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமி (32), கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமி (22), சென்னையில் இயங்கும் ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடமி (187) போன்றவற்றில் 341 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் சேருவதற்கு பட்டப்படிப்பும், இந்திய கடற்படை அகாடமி பதவிக்கு என்ஜினீயரிங் படிப்பும், விமானப்படை அகாடமி பதவிக்கு 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதத்தை அடிப்படையாக கொண்ட பட்டப்படிப்பு அல்லது என்ஜினீயரிங் படிப்பும் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, ஆளுமை திறன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-1-2022. வயது வரம்பு, விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://upsconline.nic.in/mainmenu2.php என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!