ஒரு ஸ்பூன் அளவிலான சர்க்கரையை, சுழலும் எந்திரத்தின் மையத்தில் கொட்டுவார்கள். அங்கே வெப்பமூட்டுவதன் காரணமாகச் சர்க்கரை உருகும். 

நிமிடத்துக்குச் சுமார் 3 ஆயிரம் சுழற்சிகள் என்ற வேகமான சுழற்சி காரணமாக, ‘மைய விலக்கு விசையால்’ உருகிய சர்க்கரை இழைகள் நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும். காற்றுடன் சேர்த்து அவற்றை ஒரு குச்சியில் அழகாகச் சுற்றி நமக்குச் சுவைக்கத் தருவார்கள். 

பஞ்சு மிட்டாயின் மென்மைக்கும், அதன் பெரிய உருவத்துக்கும் அதில் சேர்ந்திருக்கும் காற்றே காரணம். கால மாற்றத்தில் எத்தனையோ நவீன இனிப்புகள், தின்பண்டங்கள் வந்துவிட்டன. ஆனாலும், எளிய பஞ்சு மிட்டாய் அதன் சிறப்பை இழக்கவில்லை. 

கிராமமோ, நகரமோ பல வகையான பஞ்சு மிட்டாய்களைக் குழந்தைகள் உட்பட அனைவரும் ருசித்து வருகிறோம். அதன் சிறப்பைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதியைப் பஞ்சு மிட்டாய் தினமாக (Cotton Candy Day) மேற்கத்திய நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.

Post a Comment

أحدث أقدم

Search here!