மாணவர் வங்கி கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு



அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பிளஸ் 2 மாணவர்களில் 2.58 லட்சம் பேரின் வங்கி கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய, பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியரின் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க, அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு தலா 1,500; பிளஸ் 2வுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த, 5.63 லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2.58 லட்சம் மாணவ - மாணவியரின் வங்கி கணக்கு விபரங்கள், பள்ளிகளில் சரியாக பதிவு செய்யப்படாதது தெரியவந்துள்ளது. எனவே, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளின் மாணவ - மாணவியர் விபரங்களை பட்டியலாக தயாரித்து, வரும் 25ம் தேதிக்குள், பள்ளிக்கல்வித் துறையின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனருக்கு இ- - மெயிலில் அனுப்ப வேண்டும் என, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

Post a Comment

أحدث أقدم

Search here!