சில குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். அதாவது, குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம். 

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். 

இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தை பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள். எனவே நீரிழிவு உள்ள குழந்தைகள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும். இடைவேளை உணவைத ்தவிர்க்கக் கூடாது. டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது. டாக்டர்களின் ஆலோசனைகளை முறையாக முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும்.

Post a Comment

أحدث أقدم

Search here!