பள்ளி மாணவா்களுக்கு பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுபிபுய சுற்றறிக்கை: 

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிகளவிலான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையின்போது பிறப்பு சான்றிதழின்படி மாணவா், பெற்றோா் பெயா் (தமிழ், ஆங்கிலம் 2 மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை பதிவேட்டில் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். கல்வி தகவல் மேலாண்மை முகமை தளத்தில் (எமிஸ்) உள்ள விவரங்களின் அடிப்படையில்தான் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்படுகின்றன. 

எனவே, எமிஸ் தளத்தில் மாணவா்களின் சுய தகவல்களை பிழையின்றி பதிவுசெய்வதை உறுதிசெய்தல் வேண்டும். அதற்கேற்ப எமிஸ் தளத்திலும் பல்வேறு அம்சங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

Post a Comment

أحدث أقدم

Search here!