தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு திருத்திய புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!! 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.06. நக.எண்.756/01/2021, நாள்.14.02.2022 

பொருள் 

பள்ளிக் கல்வி 2021 2022 -ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல் சார்பு. 

பார்வை 

1. அரசாணை (நிலை) எண்.176 பள்ளிக் கல்வி (1.55(1) துறை, நாள். 17:122021) 

2 பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள் 30.12.2021 06.01.2022 07.01.2022 08.01.2022. 10.01.2022 20.01.2022 2101.2022. 22.012022 24.01.2022 மற்றும் 28.012022 

3. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.756/01/2021, நாள் 06.01.2022 

பார்வை -1ல் காணும் அரசாணையில் 2021 - 2022 -ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பார்வை-2-ல் காணும் செயல்முறைகளின் வாயிலாக பொதுமாறுதல்கள் | பதவி உயர்வுகளுக்கான அட்டவணைகள் வெளியிடப்பட்டது. கால 

இதனைத் தொடர்ந்து முந்தைய கலந்தாய்வுகளில் பணியிடத்துடன் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈரித்தல், எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல், எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள ஒரே ஒன்றியத்திற்குள் பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை பள்ளிக்கு ஈர்த்தல், சார்பான கலந்தாய்வு நடைபெற இருப்பதால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பான கால அட்டவணையினை திருத்தம் செய்து இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது. 

இணைப்பு: திருத்திய கலந்தாய்வு அட்டவணை,  
தொடக்கக் கல்வி இயக்குநர்.




Post a Comment

أحدث أقدم

Search here!