சுவாசமில்லா உயிரினம் 

ஜெல்லி மீன் போன்ற ஒட்டுண்ணிக்கு, மைட்டோகாண்ட்ரியல் மரபணு இல்லை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதாவது இந்த ஒட்டுண்ணி உயிர்வாழ்வதற்கு சுவாசிக்க தேவையில்லை. ஆக்சிஜனைச் சாராமல், இதனால் முழுமையாக வாழ முடியும். இந்தத் தன்மை உள்ள பலசெல் உயிரினமும் இதுவாகும். இந்த கண்டுபிடிப்பு பூமியில் வாழ்க்கை எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய நமது புரிதலை மட்டுமின்றி; வேற்றுக்கிரக வாழ்க்கையை தேடும் நம்முடைய முயற்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். 

அதாவது, ஆக்சிஜன் இல்லா பலசெல் உயிரினங்கள் வாழ்வது குறித்த சாத்தியம் என்பது விவாதங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. இதுசம்பந்தமாக இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தயானா யஹலோமி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு ‘ஹென்னகுயா சால்மினிகோலா’ என்ற சால்மன் மீன் வகையை ஆய்வு செய்தது. இதற்காக சால்மினிகோலாவை (சால்மன் மீன்) தீவிரமாக ஆய்வுசெய்ய மரபணுக்கோவையையும், பிளாரசென்ஸ் நுண்ணோக்கியையும் அறிவியலாளர்கள் பயன்படுத்தினார்கள். 

 ஆய்வின் முடிவில், அந்த வகை மீன் தனது மைட்டோகாண்ட்ரியல் மரபணுவையும் சுவாசத் திறனையும் இழந்துவிட்டதை அவர்கள் கண்டறிந்தனர். இதன் மூலம் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் தேவையற்ற ஒரு பலசெல் உயிரினம் அது என்பது அவர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகும். ஆனால், அது எவ்வாறு உயிர்வாழ்கிறது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதுசம்பந்தமான ஆராய்ச்சிகள் இன்னும் விரிவடைந்து வருகின்றன.

Post a Comment

أحدث أقدم

Search here!