ஒவ்வொரு வங்கியிலும் தேர்வுசெய்யப்பட்ட வக்கீல்கள் குழு உண்டு. வங்கிக்கடன் பெற வேண்டுமென்றால் அவர்களில் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான ஆவணங்களை பரிசீலனைக்கு அளிக்க வேண்டும். சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அவர்கள் சான்றிதழ் அளித்த பிறகுதான் கடன் அல்லது வீட்டுக்கடன் அளிப்பது தொடர்பாக வங்கி முடிவெடுக்கும். அசல் ஆவணங்கள் இல்லையென்றால் வக்கீல், அதற்கான சான்றிதழ் கொடுக்க மாட்டார். வங்கி எதற்காக இந்த நடைமுறையை தேர்ந்தெடுக்கிறது தெரியுமா? சொத்துரிமையில் ஏதோ பிரச்சினை இருந்தால் அது கடன் அளித்தவரின் உரிமையைப் பாதிக்கும். 

தினம் ஒரு தகவல் அசல் ஆவணங்களை சரிபார்ப்பதன் அவசியம்

சொத்து வாடிக்கையாளரின் கையைவிட்டுப் போனால் அவரால் வங்கிக்கடனை சரியாகச் செலுத்த முடியாமல் போகும். இதனால் வங்கிக்கும் நஷ்டம். இதற்காகத்தான் வங்கி, வக்கீல்களின் கருத்தை பெறுகிறது. வக்கீல்களுக்கு சில ஆயிரங்களை நாம்தான் கொடுக்க வேண்டியிருக்கும். என்றாலும் இது ஒரு பாதுகாப்பான முறை. சொல்லப்போனால் வங்கி மூலமாகக்கடன் பெறவில்லை என்றால்கூட ஒரு சொத்தை வாங்குவதற்குமுன் இப்படி ஒரு வக்கீல் மூலம் அந்த சொத்து சம்பந்தமான ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. வக்கீலே நேரடியாகக் பில்டரின் அலுவலகத்துக்கு வந்து அசல் ஆவணங்களைச் சரிபார்க்கலாம். அசலையும், நகலையும் கொஞ்சம் விவரமாக, நிதானமாக ஒப்பிட்டுப் பார்த்து விடுவதும் நல்லதுதான். காரணம், அதில் மோசடிகளும் இருக்கலாம். எனவே அசல் ஆவணங்களை சரிபார்க்காமல் சொத்து வாங்குவது சரியல்ல என்பதுதான் சட்டத்துறையை சேர்ந்தவர்களின் கருத்தாகும்.

Post a Comment

أحدث أقدم

Search here!