அஞ்சல் துறை சார்பில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி ஈரோட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கடிதம் எழுதும் போட்டி 

இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்டம் சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 

 மாணவ மாணவிகளுக்கு இடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க 9 வயது முதல், 15 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. ‘காலநிலை நெருக்கடி குறித்து ஏன் மற்றும் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விளக்கி செல்வாக்கு மிக்க ஒருவருக்கு’ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும். தேசிய அளவில் 3, தபால் துறை வட்ட அளவில் 3 என்ற வீதம் படைப்புகள் தேர்வு செய்யப்படும். சிறந்த படைப்புகள் சர்வதேச அளவிலான போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும். 

ஆர்வம் உள்ளவர்கள் வருகிற 4ந்தேதி (நாளை) ஈரோட்டுக்கு நேரடியாக வந்து போட்டியில் பங்கேற்கலாம். இணையதள முகவரி வீட்டில் இருந்தவாறு எழுதுபவர்கள் வருகிற 15ந்தேதிக்குள் எழுதிய கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு நடக்கும் இடம், வீட்டில் இருந்து எழுதுபவர்கள் அந்த கடிதத்தை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரங்கள் www.indiapost.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 

 தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். அஞ்சல் துறை வட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2ம் பரிசு ரூ.10 ஆயிரமும், 3ம் பரிசு ரூ.5 ஆயிரமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!