கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் சற்று தாமதமாகவே தொடங்கின. இதனைக் கருத்தில் கொண்டும், மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கமாக நடைபெறும் மார்ச் மாதத்திலிருந்து மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

அதன்படி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அதனடிப்படையில் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனைத்து பணிகளையும் முழுவீச்சில் செய்து வருகிறது. இந்தநிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் 22-ந் தேதி (இன்று) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. 

பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று அவர்களுக்கென்று வழங்கப்பட்ட கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!