தமிழக மின்னாளுமை முகமை இயக்ககம் உருவாக்கிய, 'குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி' வாயிலாக, 26 லட்சம் குழந்தைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

சமூக நலத் துறையின் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு வாயிலாக செயல்படும், 'குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி'யை, மின்னாளுமை முகமை இயக்ககம் உருவாக்கியது. 


இந்த செயலி, ஒரு வாரத்திற்கு முன் சோதனை அடிப்படையில், அங்கன்வாடி மையங்களில் செயல்பாட்டுக்கு வந்தது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் போனில், செயலி பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.அந்த செயலியில், ஒரு குழந்தையை முழுமையாக புகைப்படம் எடுத்ததும், அக்குழந்தையின் எடை, உயரம், ஊட்டச்சத்து குறைபாடு விபரங்கள் ஆகியவை தானாகவே கணக்கிடப்படும்.


சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி வாயிலாக, ஒரு வாரத்தில், 26 லட்சம் குழந்தைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையாக இருப்பதால், குழந்தைகளின் விபரங்களை உடனடியாக பதிவு செய்ய முடிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

أحدث أقدم

Search here!