தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு கையடக்க கணினி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

 வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு வெள்ளை அங்கி வழங்கினார். பின்னர் வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கையடக்க கணினி நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:- 


மாநில அரசால் நிரப்பப்பட வேண்டிய இடங்கள், நிரப்பப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசின் இடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 24 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள சுமார் 300 இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இதனால் விரைவில் அந்த இடங்கள் நிரப்பப்படும். 


ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரிக்கு தேவையான கூடுதல் திட்ட மதிப்பீடு நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. கல்வியும், சுகாதாரமும் மாநில பட்டியலில்தான் இருக்கிறது. தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 534 மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க கணினி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

أحدث أقدم

Search here!