கல்வித் துறையில் நீதிமன்றம் நிபுணராக செயல்பட முடியாது உச்ச நீதிமன்றம் கருத்து

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயர் நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொதுவாக கல்வித்துறையில், நீதிமன்றம் ஒரு நிபுணராக செயல்பட முடியாது. ஒரு மாணவர் சேர்க்கையிலோ அல்லது பணி நியமனத்திலோ, ஒரு விண்ணப்பதாரர் தேவையான தகுதிகளை பெற்றிருக்கிறாரா? இல்லையா? என்பதை கல்வி நிறுவனங்களே முடிவு செய்ய விட்டுவிட வேண்டும். 

 வரலாற்று பாடத்தில் ஒரு பிரிவில் பட்டம் பெறுவதை ஒட்டுமொத்த வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்றதாக கருத முடியாது. ஒரு வரலாற்று ஆசிரியர் என்பவர் பண்டைய வரலாறு, கலாசாரம், தொல்லியல், நவீன வரலாறு என அனைத்தையும் கற்றறிந்தவராக இருக்க வேண்டும். மேலும், தேவையான கல்வித் தகுதிகள் விளம்பரத்தில் வரலாறு, குடிமையியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எந்த குழப்பமும் இன்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் விளம்பரத்தின்படி தேவையான கல்வித் தகுதிகளை கொண்டிருக்கவில்லை. எனவே, மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Post a Comment

أحدث أقدم

Search here!